TNPSC Tamil MCQ Questions and Answers

TNPSC Tamil MCQ Questions and Answers:

1) பொருந்தா இணையைச் சுட்டுக.

A) வெட்சிப்பூ – சிவப்பு

B) நொச்சிப்பூ – பச்சை

C) உழிஞைப்பூ – மஞ்சள்

D)  தும்பைப்பூ – வெள்ளை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

2) பெயருக்கேற்ற வினையை எழுது.

சோறு —————

A) சாப்பிடு

B) உண்

C) தின்

D)  புசி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

3) வழுஉச் சொல்லை திருத்தி எழுது.

தலக்காணி ————-

A) தலையணி

B) தலைகாணி

C) தலையணை

D)  தலையனை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

4) சந்திப்பிழை நீக்கி எழுதுக

A) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை

B) பண்பாட்டுக் கூறுகளைப் பேணி பாதுகாப்பது நம் கடமை

C) பண்பாட்டு கூறுகளை  பேணி பாதுகாப்பது நம் கடமை

D)  பண்பாட்டு கூறுகளை பேணி பாதுகாப்பது நம் கடமை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

5) சந்தி பிழையற்ற தொடா்

வள்ளை பாட்டியின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன

A) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது

B) வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றது

C) வள்ளைப் பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன

D)  வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றன

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

6) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

“நாடும் மொழியும் நமதிரு கண்கள்“ என்கிறார் மகாகவி பாரதியார்

A) நாடும் மொழியும் நமதிரு கண்களா?

B) நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று கூறியவர் யார்?

C) நமதிரு கண்கள் நாடும் மொழியும் ஆகுமா?

D)  நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று பாரதியார் ஏன் பாடவில்லை?

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

7) “செங்கோல்” – இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக

A) கொடுங்கோல்

B) நெடுங்கோல்

C) நல்ல போல்

D)  வளையாத கோல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

8) ஒறுத்தார் – எதிர்ச்சொல் தருக

A) பகைவா்

B) தண்டித்தவா்

C) நட்புக்கொண்டவர்

D)  பொறுத்தவா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

9) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

சொல்லும் – பொருளும்

A) புரிசை – மதில்

B) மாகால் – கடல்

C) புழை – சாளரம்

D)  நியமம் – அங்காடி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

10) பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு

A) செந்தாமரை

B) கடுங்கதிர்

C) இன்சொல்

D)  அலைகடல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

TNPSC Tamil MCQ Questions and Answers:

11) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக

Revivalism

A) மெட்டுருவாக்கம்

B) நெட்டுருவாக்கம்

C) மீட்டுருவாக்கம்

D)  நீட்டுருவாக்கம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

12) தமிழ்ச்சொல் அறிவோம்

க்ராப் (Crop)

A) செதுக்கி 

B) வெட்டி

C) நீக்கி

D)  ஏதுமில்லை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

13) “கான் – காண்“ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.

A) காட்டிற்குச் சென்று வந்தான்

B) காட்டிற்குச் சென்று பூந்தோட்டத்தைப் பார்த்தான்

C) காட்டிற்குப் புறப்பட்டான்

D)  காட்டிற்குச் சென்று தங்கினான்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

14) அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது?

          அரி                              அறி

A) திருமால்                –        அறிந்து கொள்

B) ஒருவகை மலா்   –        சிவன்

C) ஒலி                          –        வெளிச்சம்

D)  பாம்பு                    –        புலி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

15) “கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.

A) கையூட்டு

B) புழுக்கம்

C) இழுக்கம்

D)  ஒழுக்கம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

16) “பே“ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க

A) மேகம்

B) பேகம்

C) பேரண்டம்

D)  பூமி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

17) சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக

“பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”

A) வருந்தி மக்கள் பாடுகின்றனர் மழை பொய்ததால்

B) பாடுகின்றனா் வருந்தி மழைபொய்த்தால் மக்கள்

C) மழைபொய்த்ததால் பாடுகின்றனர் மக்கள் வருந்தி

D)  மழைபொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடகின்றனர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

18) சொற்களை ஒழுங்குபடுத்துக

A) பரணி வென்றதைப் பாடும் இலக்கியம் பகைவரை ஆகும்

B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்

C) பரணி பாடும் இலக்கியம் பகைவரை வென்றதை ஆகும்

D)  பகைவரை வென்றதை இலக்கியம் பரணி பாடும் ஆகும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

19) அகரவரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு

a) கிழக்கு, கௌதாரி, கீற்று, கோலம், குருவி

b) குருவி, கோலம், கீற்று, கொளதாரி, கிழக்கு

c) கொளதாரி, கோலம், கிழக்கு, கீற்று, குருவி

d) கிழக்கு, கீற்று, குருவி, கோலம், கௌதாரி

A) a மட்டும் சரி

B) b மட்டும் சரி

C) c மட்டும் சரி

D)  d மட்டும் சரி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

20) சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து

2) மூதுார், மென்பொருள், முந்நீர்

3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்

A) 2, 3

B) 1, 2

C) 1,  3

D)  2

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

TNPSC Tamil MCQ Questions and Answers:

21) “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாடியவா்

A) இளங்கோவடிகள்

B) சீத்தலைச் சாத்தனார்

C) பாரதியார்

D)  பாரதிதாசன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

22) “கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்

A) இளங்கோவடிகள்

B) கம்பா்

C) இளங்கோவடிகள்

D)  புகழேந்தி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

23) போக்குக

கூற்று :  இது வியங்கோள் வினைமுற்று

காரணம் : “போ“ என்ற கட்டளைத் தொனியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோள் வினைமுற்று

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று சரி, காரணமும் சரி

C) கூற்று தவறு, காரணம் சரி

D)  கூற்று தவறு, காரணமும் தவறு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

24) இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக

1) மொழில்பெயா்             –        செப்பல்

2) வினைத்தொகை         –        காய்மணி

3) உவமைத்தொகை       –        மூதுார்

4) வேற்றுமைத் தொகை         –        மலர்க்கை

A) 1, 2

B) 1, 3

C) 1,4

D)  3, 4

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

25) விடைக்கேற்ற வினா

இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்

A) இருவகை வழக்கு யாது?

B) வழக்கின் வகைகள் யாவை?

C) இயல்பு வழக்க என்றால் என்ன?

D)  தகுதி வழக்க என்றால் என்ன?

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

26) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள

நுாலகம் கன்னிமாரா நுாலகமே

A) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?

B) முதல் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?

C) தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?

D)  கன்னிமாரா நுாலகம் உலகளவில் பெரியதா?

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

27) எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

a) சமைப்பது தாழ்வா?

b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

A) கட்டளை வாக்கியம் மற்றும் வேண்டுதல் வாக்கியங்கள்

B) வினா மற்றும் செய்தி வாக்கியங்கள்

C) வினா மற்றும் உணா்ச்சி வாக்கியங்கள்

D)  செய்தி மற்றும் கட்டளை வாக்கியங்கள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

28) கீழ்வருவனவற்றள் “பிறவினை“ – வாக்கியம் எது?

A) நான் இலக்கணம் படித்தேன்

B) செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்

C) என்னே தமிழ்ன் இனிமை?

D)  தமிழியக்கம் நுாலை இயற்றியவா் யார்?

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

29) “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்”?

இவ்வடிகளில் அமைந்த அடியெதுகைச் சொற்கள்

A) முத்தமிழ்     – துய்ப்பதால்

B) முத்தமிழ் – முச்சங்கம்

C) முத்தமிழ் – மேவலால்

D)  முத்தமிழ் – மெத்த

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

30) சரியான இணை தோ்க.

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேறும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே

இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

A) தேனிலே, ஊனிலே     – அடி எதுகை

B) தேறும், புறுவோமே    –        அடி எதுகை

C) ஊறிய, ஊனியே –        அடி மேனை

D)  தேனிலே, தேறும்        –        அடிமோனை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

TNPSC Tamil MCQ Questions and Answers:

31) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“பசு மரத்து ஆணி போல“

A) தெளிவாகத் தெரியும்

B) எளிதில் மரத்தில் பதியும்

C) எளிதில் மனதில் பதியாது

D)  எளிதில் மனதில் பதியும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

32) “மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது

A) வருந்துதல்

B) அழுதல்

C) அச்சப்படுதல்

D)  சிரித்தல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

33) சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க

கந்தை —————— கசக்கிகட்டு; கூழானாலும் குளித்துக் குடி

A) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி

B) கந்தையைக் கசக்கிக் கட்டு; கூழைக் குளித்துக் குடி

C) கந்தை என்றாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி

D)  கூழ் ஆனாலும் குளித்துக் குடி; கந்தையைக் கசக்கிக் கட்டு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

34) பழமொழிகள்

ஏழை – பணக்காரன்

வோறுபாடு அறிய உதவும் பழமொழி

A) இருப்பவனுக்கு புளியேப்பம் இல்லாதவனுக்கு பசியேப்பம்

B) பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா

C) புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது

D)  அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

35) உண் – என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்

A) உண்ட

B) உண்டு

C) உண்டது

D)  உண்டல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

36) “படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.

A) படித்தார்

B) படித்து முடித்தான்

C) படிக்கின்றாள்

D)  படித்தவனை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

37) கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

“பயின்றான்”

A) பயின்ற

B) பயின்றனன்

C) பயில்கிறான்

D)  பயில்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

38) கிறித்துவக் கம்பா் என அழைக்கப்படுபவர் யார்?

A) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை

B) வீரமா முனிவா்

C) பரிதிமாற் கலைஞர்

D)  தாயுமானவர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

39) கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை

மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.

A) காலப்பெயா்

B) தொழிற்பெயா்

C) பண்புப்பெயா்

D)  பொருட்பெயா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

40) வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-

A) பொருள் பெயா்

B) சினைப்பெயா்

C) தொழிற் பெயா்

D)  பண்புப்பெயா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

TNPSC Tamil MCQ Questions and Answers:

41) கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?

A) 13

B) 12

C) 14

D)  16

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

42) சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?

A) காதை

B) படலம்

C) காண்டம்

D)  இலம்பகம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

43) ஸ்ரீபுராணம் என்னும் வழமொழிச் சைன நுாலில் உள்ள திவிட்டன் விசயன் கதையை விளக்கும் தமிழ்க் காப்பியம்

A) யசோதர காவியம்

B) வளையாபதி

C) சூளாமணி

D)  நீலகேசி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

44) “நாட்டுதும் யாம்  ஓா் பாட்டுடைச் செய்யுள்“ – என்று காப்பியம் படைத்தவா்

A) சாத்தனார்

B) இளங்கோவடிகள்

C) புகழேந்தி

D)  கம்பா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

45) புறநானுற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவா்

A) ஜார்ஜ் எல் ஆர்ட்

B) எல்லீஸ்

C) வீரமாமுனிவா்

D)  ஜி.யு.போப்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

46) தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நுாலை இயற்றியவா்

A) கபிலா்

B) நக்கீரா்

C) கடியலுார் உருத்திரங் கண்ணனார்

D)  நம்பூதனார்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

47) மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்

A) கூத்தராற்றுப்படை

B) பொருநராற்றுப்படை

C) பெரும்பாணாற்றுப்படை

D)  திருமுருகாற்றுப்படை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

48) பொருத்துக

a) வெய்யோன்         –        1) காற்றாடி

b) கறங்கு                   –        2) யானை

c) கொண்டல்  –        3) பகலவன் (சூரியன்)

d) வேழம்          –        4) மழைமேகம்

          a        b       c        d

A)      3        2        4        1

B)      3        1        4        2

C)      1        4        2        3

D)      1        3        2        4

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

49) இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்

A) உத்திரகாண்டம்

B) சுந்திர காண்டம்

C) பால காண்டம்

D)  அயோத்தியா காண்டம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

50) “காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணரவைக்கும் உன்னத நுால்” என்று பேரறிஞா் அண்ணாவால் குறிப்பிடப்படும் நுால்

A) புரட்சி கவி

B) இராவண காவியம்

C) ஊரும் பேரும்

D)  பாஞ்சாலி சபதம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

TNPSC Tamil MCQ Questions and Answers:

51) “ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ – என்று இயம்பியவன்

A) குகன்

B) பரதன்

C) சுக்ரீவன்

D)  அனுமன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

52) திருக்குறளுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் நீதி நுால்

A) நாலடி நானுாறு

B) நான்மணிக்கடிகை

C) இன்னாநாற்பது

D)  திரிகடுகம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

53) ஐந்து சிறிய வோ்கள் என்ற பொருள் கொண்ட நுால் எது?

A) ஏலாதி

B) திரிகடுகம்

C) சிறுபஞ்சமூலம்

D)  நாலடியார்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

54) மன்பதைக்குப் பொருவான் நுால் எது?

A) திருவாசகம்

B) திருக்குறள்

C) தேவாரம்

D)  மகாபாரதம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

55) எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை

A) ஒப்புரவு

B) பயனில சொல்லாமை

C) தவம்

D)  கல்வி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

56) தீதின்றி வந்த பொருள் எவற்றை ஈனும்?

A) அறமும் இன்பமும்

B) கல்வியும் செல்வமும்

C) தானமு் தருமமும்

D)  ஒழுக்கமும் புகழும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

57) தமிழக அரசால் சிறந்த நுாலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது?

A) அறிஞா். அண்ணா விருது

B) டாக்டா்.எஸ்.இராதாகிருஷ்ணன் விருது

C) தேவநேய பாவாணா் விருது

D)  டாக்டா்.ச.இரா.அரங்கநாதன் விருது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

58) திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?

A) திருவாளா்

B) திருவாரூர்

C) திருஞானம்

D)  திருச்சி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

59) “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அதுமெய்ம்மையைத் தேடவும் அறநெறெியைப் பயிலவும் பனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்“ இக் கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) விஜயலட்சுமி பண்டிட்

C) வள்ளலார்

D)  தாயுமானவர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

60) பொருந்தாததைக் கண்டறிக

A) கரிசலாங்கண்ணி

B) பிருங்கராசம்

C) கையாந்தகரை

D)  சிங்கவல்லி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

TNPSC Tamil MCQ Questions and Answers:

61) “கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு

A) மதுரை தமிழ்ச்சங்கம்

B) உலகத் தமிழ்ப் பேரவை

C) நான்காம் தமிழ்ச்சங்கம்

D)  சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

62) “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“

இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நுால்

A) அகநானுாறு

B) பதிற்றுப்பத்து

C) புறநானுாறு

D)  பரிபாடல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

63) சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்

A) ஐடாஸ் சோபியா ஸ்கட்டா்

B) மூவலுார் இராமாமிர்தம்

C) விஜயலட்சுமி பண்டிட்

D)  டாக்டா். முத்துலெட்சுமி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

64) “தென்னாட்டின் ஜான்சிராணி“ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்

A) அஞ்சலையம்மாள்

B) அம்யுஜத்தம்மாள்

C) வேலுநாச்சியார்

D)  தில்லையாடி வள்ளியம்மை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

65) தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்

A) வெள்ளிவீதியார்

B) வெண்ணிக்குயத்தியார்

C) ஒக்கூா்மாசாத்தியார்

D)  ஓரம்போகியார்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

66) திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு

A) இத்தாலி

B) கனடா

C) இங்கிலாந்து

D)  இலங்கை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

67) கிழக்கு தொடர்ச்சி மலையும்

மேற்குத் தொடர்ச்சி மலையும்

சந்திக்கும் இடத்தில் இருக்கும் நிலப்பகுதி

A) மேட்டுப்பாளையம்

B) கொடைக்கானல்

C) நீலகிரி

D)  கொல்லிமலை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

68) “பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்

A) மதுரைக்காஞ்சி

B) பரிபாடல்

C) பட்டினப்பாலை

D)  சிலப்பதிகாரம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

69) தந்தை பெரியாருக்கு “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டி பட்டம் வழங்கிய அமைப்பு

A) யுனெஸ்கோ

B) யுனிசெப்

C) உலகத் தமிழ்ப் பேரவை

D)  சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

70) “இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது

A) சந்தாசாகிப்பால் குணங்குடி மஸ்தானுக்கு

B) சரபோஜியால் வேதநாயகருக்கு

C) சரபோஜியால் சீகன் பால்குக்கு

D)  சந்தாசாகிப்பால் வீரமாமுனிவருக்கு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

TNPSC Tamil MCQ Questions and Answers:

71) “வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?

A) ரா.பி. சேதுபிள்ளை

B) ம.பொ.சிவஞானம்

C) திரு.வி.கல்யாண சுந்தரனார்

D)  உ.வே. சுவாமிநாதா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

72) “ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

அழியாமலே நிலை நின்றதுவாம்“

என்று தமிழின் பெருமையைப் பாடி மகிழும் பாவலா் யார்?

A) பொருஞ்சித்திரனார்

B) கவிராச பண்டிதர்

C) கணேச பண்டிதா்

D)  சபாபதி நாவலர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

73) “தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?

A) பரிதிமாற்கலைஞா்

B) உ.வே.சா

C) நாவலர் சோம சுந்தர பாரதியார்

D)  தேவநேயப் பாவாணா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

74) சரியான விடையை தோ்வு செய்க

தனித்தமிழுக்கு வித்திட்டவா்

A) உ.வே. சாமிநாத ஐயா்

B) பண்டிதமணி கதிரேச செட்டியார்

C) பரிதிமாற்கலைஞா்

D)  வேங்கடசாமி நாட்டார்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

75) முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?

A) தனிநாயம் அடிகள்

B) சங்கர நாராயணன்

C) திரு.வி.கலியாண சுந்தரனார்

D)  செய்கு தம்பி பாவலர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

76) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன

A) ஓவிய எழுத்துகள்

B) கண்ணெழுத்துகள்

C) படி எழுத்துகள்

D)  ஒலி எழுத்துகள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

77) “செப்புத் திருமெனிகளின் பொற்காலம்“ என் அழைக்கப்படுவது

A) விஜயநகர காலம்

B) பல்லவா் காலம்

C) நாயக்கா் காலம்

D)  சோழா் காலம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

78) “கண்ணுள் வினைஞா்“ எனப் பகழப்படுபவா்கள்

A) அம்பு எய்துபவா்கள்

B) காளையை அடக்குபவா்கள்

C) நடனக் கலைஞா்கள்

D)  ஓவியம் வரைபவா்கள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

79) கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?

A) எஸ். ராமகிருஷ்ணன்

B) புவியரசு

C) தாராபாரதி

D)  இராதா கிருஷ்ணன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

80) பொருத்துக

a) புதுமைப்பித்தன்          –        1) அழியாச் சுடா்

b) கு.ப.ராஜகோபாலன்  –        2) முள்முடி

c) மௌனி                           –        3) காஞ்சனை

d) தி.ஜானகிராமன்          –        4) மூன்று உள்ளங்கள்

          a        b       c        d

A)      1        2        4        3

B)      3        4        1        2

C)      2        1        3        4

D)      4        3        2        1

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

TNPSC Tamil MCQ Questions and Answers:

81) தவறானத் தொடா்களைத் தோ்ந்தெடு

1) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை தப்பாட்டம்

2) தப்பாட்டம் ஆண்கள் மற்றும் பெண்களாலும் ஆடப்படுகிறது

3) தேவராட்டம் ஆண்கள் மற்றும் பெண்களாலும் ஆடப்படும்

4) நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படும் கலையே தெருக்கூத்து

A) 1) மற்றும் 3) மட்டும்

B) 1)  மற்றும் 2) மட்டும்

C) 2) மற்றும் 3) மட்டும்

D)  3) மற்றும் 4) மட்டும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

82) பொங்கற் புதுநாளில் நமக்கு ஒரு மகிழ்வு, நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சோ்ந்துவிடத்தான் செய்கிறது – என எழுதியவா்

A) அறிஞா் அண்ணா

B) கருணாநிதி

C) மு.வ.

D)  கவிமணி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

83) பொருத்துக

a) யாக்கை                –        1) உடம்பு

b) புன்புலம்               –        2) உரிக்கும்

c) வேழம்           –        3) புல்லியநிலம்

d) பொளிக்கும்         –        4) ஆண்யானை

          a        b       c        d

A)      3        1        4        2

B)      1        4        3        2

C)      1        3        4        2

D)      1        2        4        3

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

84) முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?

A) காவியம்

B) இலக்கியம்

C) விண்மீன்

D)  ஊர்வலம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

85) பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?

A) தொடுவானம்

B) தேன்மழை

C) ஒளிப்பறவை

D)  ஏழிலோவியம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

86) “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்

A) பாரதியார்

B) சுரதா

C) வண்ணதாசன்

D)  பாரதிதாசன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

87) பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவா்

A) அப்பா்

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தா்

D)  மாணிக்கவாசகா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

88) நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?

A) திருநாவுக்கரசா்

B) திருஞானசம்பந்தா்

C) திருமங்கையாழ்வார்

D)  திருமூலர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

89) பதினெண் சித்தா்களில் ஒருவா்

A) போகா்

B) நாகா்

C) கண்ணப்பா்

D)  கண்ணகனார்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

90) “ஆராய்ச்சி என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்

A) தே.லுார்து

B) நா.வானமாமலை

C) ஆறு. அழகப்பன்

D)  சு.சக்திவேல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

TNPSC Tamil MCQ Questions and Answers:

91) “வாடா“ என் அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!

என்று பாடியவா்

A) அண்ணாமலையார்

B) அதிவீரராம பாண்டியா்

C) அழகிய சொக்கநாதர்

D)  அருணகிரிநாதர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

92) “நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்”

என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நுால்

A) கண்ணன் பாட்டு

B) குயில் பாட்டு

C) பாஞ்சாலி சபதம்

D)  பாப்பாப் பாட்டு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

93) “ஆழிக்கு இணைகிடந்ததே தமிழ் ஈண்டு“

என்பதில் தமிழோடு ஒப்பிடப்பட்டு பாடிய சொல் எது?

A) நிலம்

B) நீர்

C) கடல்

D)  காற்று

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

94) “உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்

A) உலா மடம்

B) உலா மடல்

C) உலாப்புறம்

D)  உலாக்குறம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

95) “தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்“

இப் பாடலடிகளில் வானின் வழி ஒழுகுவதாய் சிறப்பிக்கப்பட்டுள்ள அருவி எது?

A) கும்பக்கரை அருவி

B) திருக்குற்றால அருவி

C) சுருளி அருவி

D)  திற்பரப்பு அருவி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

96) மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – இவ்வரிகளால் சுட்டப்படுபவா்

A) ஆடல் மகளிர்

B) தமிழ்த் தாய்

C) விறலியா்

D)  பொருநா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

97) சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்

A) குலோத்துங்க சோழன்

B) அநபாயச் சோழன்

C) இராசேந்திர சோழன்

D)  இராசராச சோழன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

98) பெரியபுராணத்தில் உள்ள சுருக்கங்களின் எண்ணிக்கை

A) 10

B) 11

C) 12

D)  13

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

99) திருவிளையாடற் புராணத்தில் “இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்“ அமைந்துள்ள காண்டம்

A) மதுரைக் காண்டம்

B) சுந்தரக் காண்டம்

C) திரு ஆலவாய்க் காண்டம்

D)  கூடற் காண்டம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

100) பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

A) முதலாம் திருமொழி

B) மூன்றாம் திருமொழி

C) நான்காம் திருமொழி

D)  ஐந்தாம் திருமொழி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

TNPSC TAMIL QUESTIONS

Leave a Comment