TNPSC Questions and Answers in Tamil:
1. இணையான தமிழ்ச்சொல் தேர்க.
Conference
(A) பெருங்கூட்டம்
(B) பெருந்திரள்
(C) மாநாடு
(D) பேரவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
2. கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
Consulate
(A) தூதரகம்
(B) இணைத்தூதரகம்
(C) துணைத்தூதரகம்
(D) காப்பகம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
3. உவமையின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க.
கிணற்றுத் தவளை போல
(A) ஒற்றுமையின்மை
(B) தற்செயல் நிகழ்வு
(C) அறியாமை நிகழ்வு
(D) எதிர்பாராத நிகழ்வு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
4. ‘விழலுக்கு இறைத்த நீர்போல’ என்ற உவமைக்கு ஏற்றப் பொருள் தருக.
(A) ஒற்றுமையின்மை
(B) வெளிப்படைத்தன்மை
(C) பயனற்ற செயல்
(D) எதிர்பாரா செயல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
5. பசுமரத்து ஆணி போல – உவமையின் பொருளைத் தேர்க.
(A) தடையின்றி மிகுதியாக
(B) அவசர குடுக்கை
(C) தற்செயல் நிகழ்வு
(D) எளிதில் மனத்தில் பதிதல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
6. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க.
விடை : யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.
(A) யானைகள் மனிதர்களை எப்படி தாக்குகின்றன?
(B) யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
(C) யானைகள் மனிதர்களை எவ்வாறு தாக்குகின்றன?
(D) யானைகள் மனிதர்களை யாரால் தாக்குகின்றன?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
7. கொடுக்கப்பட்டுள்ள வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொற்றொடரை தெரிவு செய்க.
விரிந்தது – விரித்தது
(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில்தோகை விரித்தது.
(B) மழைக்காற்று மயில்தோகை விரித்தது; பூவின் இதழ்கள் வீசியதால் விரிந்தன.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில்தோகை விரிந்தன.
(D) மயில்தோகை விரிந்தது பூவின் இதழ்கள் காற்று மழை வீசியதால் விரிந்தன.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
8. இரு வினைகளின் பொருள் வேறுபாடறிந்து பிழையான தொடரைத் தேர்க.
அடங்கு – அடக்கு
(A) காவலர் அடக்க, திருடர்கள் அடங்கினர்
(B) மனத்தை அடக்கினால், ஆசை அடங்கும்
(C) ஆசிரியர் அடங்கியதால் மாணவர் அடங்கினர்
(D) ஆசிரியர் அடக்க, மாணவர் அடங்கினர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
9. அகரவரிசைப்படுத்துக :
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்.
(A) ஆசிரியர், மனிதன், பழம், கிளி, மாணவன், மான், வௌவால், ஓணான், பூனை, தையல், தேனி
(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வௌவால்
(C) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மான், மாணவன், வௌவால்
(D) ஆசிரியர், ஓணான், கிளி, தையல், தேனி, பழம், பூனை, மான், மாணவன், மனிதன், வௌவால்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
10. அகர வரிசைப்படி சொற்களை அமைக்க.
கோடை, கடல், கொண்டல், குளிர்ச்சி
(A) கடல், கோடை, கொண்டல், குளிர்ச்சி
(B) கடல், குளிர்ச்சி, கொண்டல், கோடை
(C) குளிர்ச்சி, கடல், கோடை, கொண்டல்
(D) கடல், கொண்டல், குளிர்ச்சி, கோடை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
11. “தணி” என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறி.
(A) தணிதல்
(B) தணிந்தது
(C) தணிந்து
(D) பணிந்தது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
12. வேர்ச்சொல்லில் இருந்து தொழிற்பெயரை அக்ஷ்தல்
கட்டு –
(A) கட்டி
(B) கட்டுதல்
(C) கட்டினான்
(D) கட்டிய
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
13. வாழ் – என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக.
(A) வாழ்ந்தான்
(B) வாழ்க்கை
(C) வாழ்ந்து
(D) வாழ்ந்த
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
14. மரம், மறம் – இவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு அறிக.
(A) தாவரம், வீரம்
(B) வீரம், தாவரம்
(C) வீடு, தோள்
(D) பகைவர், நட்பு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
15. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
இளை – இழை
(A) செடியின் இலை – நூல் இழை
(B) நூல் இழை – மெலிதல்
(C) செடியில் இருப்பது – மெலிதல்
(D) மெலிந்து போதல் – நூல் இழை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
16. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிதல்.
பிழைகளற்ற தொடரைக் கண்டறிக.
(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.
(B) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின
(C) என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.
(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
17. ‘Vowel‘ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
(A) ஒலியன்
(B) மெய்யொலி
(C) மூக்கொலி
(D) உயிரொலி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
18. மரபுப் பிழை நீக்குதல்.
கொடியில் உள்ள மலரை எடுத்து வா!
(A) கொடியில் உள்ள பூவைக் கொண்டு வா!
(B) கொடியில் உள்ள மலரைக் கொண்டு வா!
(C) கொடியில் உள்ள மலரைப் பறித்து வா!
(D) கொடியில் உள்ள மலரைக் கொய்து வா!
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
19. சந்திப்பிழையற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
(A) கைவினைக்கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்
(B) கைவினை கலைகளுள் ஒன்றை கற்றுக் கொள்வேன்
(C) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்று கொள்வேன்
(D) கைவினைக் கலைக்களுள் ஒன்றைக் கற்று கொள்வேன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
திருவள்ளுவர்
(A) காலம் கி.மு. 31
(B) 1330 திருக்குறள்
(C) குறள் வெண்பா
(D) மேற்கணக்கு நூல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
21. மங்கலவழக்குச் சொல் அல்லாதது தேர்க.
(A) திருமுகம்
(B) வெள்ளாடு
(C) நன்காடு
(D) சோணாடு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
22. அணுகு – என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக.
(A) அண்மை
(B) அருகில்
(C) விலகு
(D) சேர்ந்திரு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
23. கலம் + ஏறி – என்றச் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) கலம்ஏறி
(B) கலமறி
(C) கலன்ஏறி
(D) கலமேறி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
24. பிரித்தெழுதுக :
செந்நெற்கட்டு
(A) செந்நெற்+ கட்டு
(B) செல் + நெல் + கட்டு
(C) செம்மை + நெல் + கட்டு
(D) செந் + நெற் + கட்டு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
25. சேர்த்தெழுதுக : கண் + இல்லது
(A) கணிஇல்லது
(B) கணில்லது
(C) கண்ணில்லது
(D) கண்ணில்லாது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
26. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ?
(A) மனிதர் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டார்கள்
(B) மனிதர்கள் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டார்
(C) மனிதர்கள் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டன
(D) மனிதர்கள் மருத்துவத்தைப் பற்றி எப்போது அறிந்து கொண்டார்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
27. சொல் – பொருள் – பொருத்துக.
(a) சேகரம் 1. சேதம்
(b) கெடிகலங்கி 2. கூட்டம்
(c) வின்னம் 3. சரியாக
(d) வாகு 4. மிகவருந்தி
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
(C) 2 4 1 3
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
28. சொல் – பொருள் – பொருத்துக.
(a) கடும்பு 1. ஒலிக்கும்
(b) நரலும் 2. பள்ளம்
(c) பொம்மல் 3. சுற்றம்
(d) படுகர் 4. சோறு
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 2 1 4 3
(D) 3 1 4 2
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
29. சரியான தொடரைக் கண்டுபிடி.
(A) அது ஒரு அழகான ஊர்.
(B) அது ஓர் அழகான ஊர்.
(C) அஃது ஒரு அழகான ஊர்.
(D) அஃது ஓர் அழகான ஊர்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
30. ‘சாலவும் நன்று’ – இது எவ்வகைத் தொடர்?
(A) அடுக்குத் தொடர்
(B) கட்டளைத் தொடர்
(C) உரிச்சொல் தொடர்
(D) உணர்ச்சித் தொடர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
31. சரியான கூட்டப் பெயர்களைத் தேர்க.
(A) ஆட்டு மந்தை
(B) மாட்டு மந்தை
(C) குதிரை மந்தை
(D) கழுதை மந்தை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
32. சரியான கூட்டுப் பெயரை தெரிவு செய்க :
புல்
(A) புல் கூட்டம்
(B) புல் கத்தை
(C) புற்கட்டு
(D) புற்குவியல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
33. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. – இக் குறட்பாவில் பயின்று வரும் அணி.
(A) தீவக அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) தன்மையணி
(D) நிரல் நிறை அணி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
34.கூற்று, காரணம் : சரியா ? தவறா ?
கூற்று : இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
காரணம் : இவை தமக்குரிய பொருளை மாறுபடும் இயல்பை உடையது.
(A) கூற்று : சரி, காரணம் : சரி
(B) கூற்று : சரி, காரணம் : தவறு
(C) கூற்று : தவறு, காரணம் : தவறு
(D) கூற்று : தவறு, காரணம்: சரி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
35. கூற்று, காரணம் : சரியா ? தவறா?
கூற்று : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
காரணம் : இந்நூலில் மணிமேகலையின் துறவு வாழ்க்கை கூறப்படுகிறது.
(A) கூற்று : சரி, காரணம் : தவறு
(B) கூற்று : தவறு, காரணம் : தவறு
(C) கூற்று : தவறு. காரணம் : சரி
(D) கூற்று : சரி, காரணம் : சரி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
36. கூற்று : ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா’? என்று வினவுதல் கொளல் வினா.
காரணம் : தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
(A) கூற்றும் காரணமும் சரி
(B) கூற்று சரி, காரணம் தவறு
(C) கூற்று தவறு, காரணம் சரி
(D) கூற்றும் காரணமும் தவறு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
37. அடைப்புக்குள் கொடுக்கப்பட்ட சொல்லின் பொருளரிந்து கோடிட்ட இடத்தை நிரப்புக.
(புள்)
(A) ஆடு மாடுகளின் உணவு _______.
(B) வயிறு நிறைந்து விட்டது என்பதன் பொருள் _______.
(C) பறவை என்பதன் வேறுபெயர் _______.
(D) அழகான தாவரம் _______.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
38. சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக.
தனக்கான ஆற்றலைச் சேகரித்து வைக்க மூளைக்குள் இடம் இல்லை. ________ அதற்குக் குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
(A) அதனால்
(B) ஏனெனில்
(C) அதுபோல
(D) அதைவிட
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
39. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. ________ கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.
(A) எனவே
(B) அதுபோல
(C) அப்படியானால்
(D) ஆனால்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
40. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
முதல் ஆழ்வார்கள் _______ பேர்?
(A) யார்
(B) எத்தனை
(C) ஏன்
(D) எதற்கு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
41. சரியான இணையைத் தேர்ந்தெடு.
(A) ரவி வந்தான் – எதிர்காலம்
(B) ரவி வருவான் – எதிர்காலம்-
(C) ரவி வருகிறான் – இறந்தகாலம்
(D) ரவி சென்றான் – நிகழ்காலம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
42. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைந்த சரியான விடையைத் தேர்க.
திடல், சோறு, தயிர், விளையாட்டு, பறவை, கூட்டம், வாழை, கூடு
(A) விளையாட்டுத்திடல், தயிர்ச்சோறு, பறவைக்கூட்டம்
(B) வாழைச்சோறு, பறவைத்திடல், பறவைக்கூடு
(C) பறவைக்கூட்டம், வாழைத்திடல், தயிர்ச்சோறு
(D) விளையாட்டுத்திடல், வாழைக்கூட்டம், பறவைக்கூடு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
43. ‘பயிற்சி‘ என்ற சொல்லோடு இணைக்க இயலாத சொல்
(A) நடை
(B) மொழி
(C) மூச்சு
(D) மலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
44. சரியான எழுத்து வழக்குத் தொடரை கண்டறிக.
(A) உசுரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன்
(B) உய்ர் போனாலும் பொய் சொல் மாட்டேன்
(C) உசுர் போனாலும் பொய் சொல்ல மாட்டேன்
(D) உயிரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
45. பின்வரும் தொடருக்கு சரியான நிறுத்தற் குறியீட்டு எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க.
மழைநீர் ஆற்றுநீர் ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க வேண்டும்.
(A) “மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர், ஆகியவற்றைச் சிறிய பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க” வேண்டும்.
(B) ‘மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க’ வேண்டும்.
(C) மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க வேண்டும்.
(D) மழைநீர்; ஆற்றுநீர்; ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர்நிலைகளில் சேகரிக்க வேண்டும்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
46. ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க.
திருநெல்வேலி
(A) நெல்லை
(B) நல்லை
(C) திருநல்வேலி
(D) நெல்வேலி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
47. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
மயிலாப்பூர்
(A) கோவை
(B) திருச்சி
(C) மயிலை
(D) குடந்தை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
48. பிரித்தெழுதுக – செய்ந்நன்றி
(A) செய் + நன்றி
(B) செய்ம் + நன்றி
(C) செய்ய் + நன்றி
(D) செய்ந் + நன்றி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
49. அவன் வந்தது ________.
(A) திணை வழு
(B) பால் வழு
(C) கால வழு
(D) மரபு வழு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
50. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க:
உழை – உளை
(A) சேறு – புற்று
(B) பாடுபடு – பறவையினம்
(C) விதி – சேறு
(D) வேலை – வலி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
51. ‘கடைக்குப் போவாயா’? என்ற தாயின் கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என விடையளிப்பது
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) நேர் விடை
(D) ஏவல் விடை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
52. ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என்று வினவுதல் எவ்வகை வினா?
(A) அறி வினா
(B) அறியா வினா
(C) கொளல் வினா
(D) ஐய வினா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
53. எவ்வகை வினா என்பதை எழுதுக. ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுதல்.
(A) ஐய வினா
(B) கொளல் வினா
(C) கொடை வினா
(D) ஏவல் வினா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
54. அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
புரோட்டோகால்
(A) முறை
(B) மரபுத்தகவு
(C) ஆவணம்
(D) கோப்பு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
55. சக்தி கவிதை இயற்றினாள். இது எவ்வகை வாக்கியம் ?
(A) பிறவினை
(B) செயப்பாட்டு வினை
(C) செய் வினை
(D) எதிர்மறை வினை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
56. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
“தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்”.
(A) பிற வினை
(B) தன் வினை
(C) செயப்பாட்டு வினை
(D) செய் வினை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
57. சரியான இணையை தேர்ந்தெடு :
வல்லொற்று இரட்டித்த பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
(A) ஆடினான் – ஆட்டினான்
(B) வருந்துவான் – வருத்துவான்
(C) சேர்வான் – சேர்ப்பான்
(D) வந்தான் – வருவித்தான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
58. வள்ளலார் வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார் –
இவ்விடைக்கேற்ற மிகச் சரியான வினாவைத் தேர்க.
(A) வள்ளலார் எல்லாருக்கும் உணவளித்தாரா?
(B) வள்ளலார் எங்குச் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்?
(C) வடலூரில் சத்திய தருமச் சாலையை தொடங்கியவர் யார்?
(D) சத்திய தருமச் சாலை எங்குத் தொடங்கப்பட்டது?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
59. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தோக.
(A) சிறுபஞ்சமூலத்தின் ஐந்து கருத்துகள் ஒவ்வொரு பாடலிலும் இடம் பெற்றுள்ளன
(B) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம் பெற்றுள்ளன
(C) ஐந்து கருத்துகள் சிறுபஞ்சமூலத்தின் இடம் பெற்றுள்ளன ஒவ்வொரு பாடலிலும்
(D) ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம் பெற்றுள்ளன சிறுபஞ்சமூலத்தின்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
60. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க.
(A) ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது அகராதி
(B) பொருளை அறியப் பயன்படுவது அகராதி ஒரு சொல்லின்
(C) அகராதி ஒரு சொல்லின் பொருளைப் பயன்படுவது அறிய
(D) ஒரு சொல்லின் பொருளை அகராதி அறியப் பயன்படுவது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
61. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக :
பொற்கொடி பொம்மை செய்வித்தாள்
(A) தன்வினை
(B) செய்வினை
(C) செயப்பாட்டு வினை
(D) பிறவினை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
62. வேர்ச்சொல்லைக் கண்டறிக.
வாழிய
(A) வாழ்
(B) வால்
(C) வாள்
(D) வாழி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
63. ஈகலான் – இவ்வினைமுற்றின் வேர்ச்சொல்லைத் தேர்க
(A) ஈக
(B) ஈகை
(C) ஈகல்
(D) ஈ
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
64. ‘உறங்கினாள்‘ – இதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) உறங்கி
(B) உறங்கிய
(C) உறங்கு
(D) உறங்கியது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
65. மரம், விலங்கு, வயல், வண்டு போன்ற பல பொருள் குறிக்கும் ஒரு சொல் யாது ?
(A) கா
(B) மா
(C) பை
(D) பூ
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
66. காற்றினைக் குறிக்காத சொல்லினைத் தேர்க.
(A) வளி
(B) தென்றல்
(C) கால்
(D) பொருப்பு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
67. ‘Dyeing’ – இச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
(A) தோல் பதனிடுதல்
(B) சாயம் ஏற்றுதல்
(C) பால் பண்ணை
(D) ஆயத்த ஆடை தயாரித்தல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
68. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக – ‘Manuscript’
(A) நூல் நிரல்
(B) புனைவு
(C) வாழ்க்கை வரலாறு
(D) கையெழுத்துப்பிரதி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
69. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக் குஞ்சுகள் ஓடின.
(A) கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக்குட்டிகள் ஓடின
(B) கோழிக் குஞ்சுப் பிடிக்கப் பூனைக் குட்டிகள் ஓடின
(C) கோழியைப் பிடிக்கப் பூனைக்குட்டிகள் ஓடின
(D) கோழிக் குஞ்சுகளைப் பிடிக்க பூனைக் குட்டிகள் ஒடியது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
70. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(எச்சங்களின் அடிப்படையில்)
படித்து, படித்த, பிடித்து, பாய்ந்து
(A) படித்து
(B) பாய்ந்து
(C) படித்த
(D) பிடித்து
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
71. ‘ஊக்கம்‘ என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
72. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் :
அஃறிணை
(A) விரவுத் திணை
(B) உயர் திணை
(C) உயர்வுடைய திணை
(D) உயர்ந்த திணை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
73. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் :
பேதையார் – எதிர்ச்சொல் தருக.
(A) அறிவிலார்
(B) அறிவுடையார்
(C) பொருளுடையார்
(D) அன்புடையார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி : (74 – 75)
இந்நூற்றாண்டில் உலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம். அது தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல, தானே முடிவெடுக்கும் திறனுடையது. பாரத ஸ்டேட் வங்கியின் ‘இலா’ ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும். ஜப்பான் உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுகிறது. இவ்வகை இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. மனிதன் கடினம் எனக் கருதும் செயல்களைச் செய்யக் கூடியவை இவை. இதழியலில் பயன்படுத்தப்படும் மென்பொருள் ‘வேர்டுஸ்மித்’ ஆகும். இவ்வுலகம் செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் பயன்படுத்துவோர் வசப்படும் என்பதில் ஐயமில்லை.
74. இன்றைய உலகை ஆளும் தொழில்நுட்பம் எது?
(A) உயிரி தொழில்நுட்பம்
(B) செயற்கை நுண்ணறிவு
(C) மீநுண் தொழில்நுட்பம்
(D) புலனம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
75. செயற்கை நுண்ணறிவின் சிறப்பாக நீங்கள் கருதுவது யாது?
(A) மனிதரைப் போல முடிவெடுக்கும் திறன்
(B) கடினமானவற்றையும் முடிக்கும் திறன்
(C) ஓய்வின்றி உழைக்கும் திறன்
(D) இவை அனைத்தும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
76. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) விளைநிலங்கள் கட்டடங்களாகிறது
(B) விளைநிலங்கள் கட்டடங்களாகின்றன
(C) விளைநிலம் கட்டடங்களாகின்றன
(D) விளைநிலங்கள் கட்டடமாகிறது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
77. சொல் – பொருள் – பொருத்துக.
(a) முனிவு 1. தலை
(b) தார் 2. சினம்
(c) தமர் 3. மாலை
(d) முடி 4. உறவினர்
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 1 4 3 2
(C) 2 3 4 1
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
78. ஒரு ஊரில் ஒரு ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது. – இத்தொடரில் உள்ள பிழைத் திருத்திய சரியான தொடரை தெரிவு செய்க.
(A) ஓர் ஊரில், ஓர் ஏரியில் ஒரு பெரிய மீன் இருந்தது.
(B) ஓர் ஊரில் ஒரு ஏரியில் ஒரு பெரிய மீன் இருந்தது.
(C) ஒரு ஊரில் ஓர் ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது.
(D) ஓர் ஊரில் ஓர் ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
79. கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக.
அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை
(A) ஒரு நகரத்திற்குச் செல்லும் சாலை
(B) அது நகரத்திற்குச் செல்லும் சாலை
(C) ஓர் நகரத்திற்குச் செல்லும் சாலை
(D) அஃது செல்லும் நகரத்திற்குச் சாலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
80. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
அடர்ந்த மரம். எவ்வகைத் தொடர்?
(A) வினையெச்சத் தொடர்
(B) பெயரெச்சத் தொடர்
(C) இடைச்சொல் தொடர்
(D) விளித்தொடர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
81. பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
“மலைபடுகடாம்” எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) கூத்தராற்றுப்படை
(B) சிறுபாணாற்றுப்படை
(C) திருமுருகாற்றுப்படை
(D) பெரும்பாணாற்றுப்படை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
82. நான்கறிவு உயிரினம்
(A) நண்டு, தும்பி
(B) சிப்பி, நத்தை
(C) கரையான், எறும்பு
(D) பறவை, விலங்கு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
83. கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்க.
(A) கைவினைஞர் – Artisan
(B) புல்லாங்குழல் – Knitting
(C) கூடைமுடைதல் – Flute
(D) பின்னுதல் – Basketry
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
84. கலைச்சொல் அறிதல்.
RITE
(A) சடங்கு
(B) கொம்பு
(C) சங்கு
(D) முரசு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
85. குறில் – நெடில் – வேறுபாடு அறிக.
பரி – பாரி
(A) பரித்தல் – பார்த்தல்
(B) பாடுதல் – ஓடுதல்
(C) குதிரை – வள்ளல்
(D) பறித்தல் – பார்த்தல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
86. இரு பொருள் தருக :
ஆறு
(A) சந்திரன், மாதம்
(B) நதி, எண்
(C) ஓடுதல், மேற்கூரை
(D) நிலவு, அறிவு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
87. இரு பொருள் தருக :
தார்
(A) மாலை, படை
(B) உலகம், நீர்
(C) மாலை, மலை
(D) மேகம், மாலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
88. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு :
துனி
(A) துன்பம், உண்மை
(B) துன்பம், கோபம்
(C) புடவை, நேர்மை
(D) புடவை, துன்பம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
89. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை ஏற்றத் தொடரில் நிரப்புக. (யாமம்)
(A) _________ என்பது குறிஞ்சி நிலத்தின் சிறுபொழுது
(B) _________ என்பது முல்லை நிலத்தின் சிறுபொழுது
(C) _________ என்பது மருத நிலத்தின் சிறுபொழுது
(D) _________ என்பது நெய்தல் நிலத்தின் சிறுபொழுது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
90. சரியான வினாச்சொல்லைத் தேர்க.
அறநெறிச்சாரம் என்பதன் பொருள் _________?
(A) எப்படி
(B) எங்கு
(C) யாது
(D) யாவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
91. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
________ சொற்களைப் பேச வேண்டும்?
(A) யாது
(B) யாவை
(C) எது
(D) எப்படி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
92. பொருத்தமான காலம் அமைத்தல்.
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் சென்றேன் (இறந்தகாலம்)
(B) மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் செல்வேன் (இறந்தகாலம்)
(C) மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் செல்கிறேன் (எதிர்காலம்)
(D) மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன் (எதிர்காலம்)
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
93. பொருத்தமான காலம் அமைத்தல்.
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) திருமந்திரம் உரைப்பதில் நாம் உளம் மகிழ்ந்தோம் (எதிர்காலம்)
(B) திருமந்திரம் உரைப்பதில் நாம் உளம் மகிழ்கிறோம் (நிகழ்காலம்)
(C) திருமந்திரம் உரைப்பதில் நாம் உளம் மகிழ்வோம் (இறந்தகாலம்)
(D) திருமந்திரம் உரைப்பதில் நாம் உளம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் (இறந்தகாலம்)
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
94. பேச்சு வழக்குச் சொற்களை நீக்கிச் சரியான தொடரைத் தேர்க.
(A) உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள வெல போகும்
(B) உழைக்கின்ற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும்
(C) உழைக்கின்ற மாடுதான் ஊருக்குள்ளே விலை போகும்
(D) உழைச்ச மாடுதான் ஊருக்குள்ள வெலை போகும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
95. இப்ப ஒசரமா வளந்துட்டான்
இத்தொடருக்கு மிகவும் பொருத்தமான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) இப்பொழுது உயரமாக வளர்ந்துவிட்டான்
(B) இப்பொழுது உயரமாக வளர்ந்திருக்கான்
(C) இப்ப உயரமா வளர்ந்துவிட்டான்
(D) இப்ப உயரமா வளர்ந்திருக்கிறான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
96. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட தொடரைக் கண்டறிக.
(A) பாமகள்; ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே!
(B) பாமகள்: ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே!
(C) பாமகள்: ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?
(D) பாமகள்; ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
97. ‘கும்பகோணம்‘ என்பதன் மரூஉ
(A) கும்பை
(B) குடந்தை
(C) கும்பகோ
(D) குடவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
98. ‘INTELLECTUAL‘ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
(A) சீர்திருத்தவாதி
(B) பொதுவுடைமைவாதி
(C) அறிவாளர்
(D) தத்துவவாதி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
99. இன்று ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது.
– ‘ஸ்மார்ட் போன்‘ என்பதற்கான தமிழ்ச் சொல்
(A) கைப்பேசி
(B) செல்லிடப்பேசி
(C) தொலைபேசி
(D) திறன்பேசி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
100. பௌதிகம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க.
(A) உயிரியல்
(B) வேதியியல்
(C) இயற்பியல்
(D) நிலவியல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C