TNPSC Objective Type Questions in Tamil with Answers – 12th STD

TNPSC Objective Type Questions in Tamil with Answers – 12th STD

1) பின்வருவனவற்றுள் பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

A) ஹைட்ரஜன்

B) மீத்தேன்

C)  நைட்ரஸ் ஆக்ஸைடு

D)  கார்பன் டை ஆக்ஸைடு

ANSWER: A

கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர்வாயு போன்றவற்றைத்தான் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறோம். ஹைட்ரஜன் பசுமைக்குடில் வாயு அல்ல.

2) நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவை _____

A) கிணறு

B) மணல்

C)  தொட்டி

D)    கற்கள்

ANSWER: B

நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவை மணல் ஆகும்.

3) கீழுள்ளவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ______

A) அடுக்குப்படிவம் உருவாகததால்

B) மழைப்பொழிவு அதிகமானதால்

C)  ஆற்றுமணல் அளவு குறைந்ததனால்

D)  செங்குத்தான வடிகால் வசதிகளினால்

ANSWER: C

மண்ணானது நீரை உறிஞ்சும் தன்மைக் கொண்டது. ஆற்றுமணல்களை பாறை தெரியும் வரை சுரண்டி விடுவதானால் நீரானது நிலத்தடிக்குள் செல்ல முடியாமல் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்காக மாறி விடுகிறது.

4) கொடுக்கப்பட்ட கூற்றுகளில் புவி வெப்பமடைதலினால் உருவாகும் கேடுகளில் முரணானதைத் தேர்ந்தெடு.

A) புவி வெப்பமடைதலினால் இயற்கை சமநிலை குறைந்து காலநிலை மாறுகிறது.

B) புவி வெப்பமடைவதினால் புவியின் இயக்கம் குறைகிறது.

C)  புவி வெப்பமடைவதினால் பேரிடர் ஏற்படுகிறது.

D)  புவி வெப்பமடைந்து கடல் நீர் மட்டம் உயர்வதனால் நீர் பற்றாக்குறைக் குறைகிறது.

ANSWER: D

கடல் நீர்மட்டம் உயர்வதனால் 200 கோடி மக்கள் வெள்ளத்தில் சூழப்படும் அபாயம் நேரிடும்.

5) வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இயலாத நாடு ______

A) இலங்கை

B) தாய்லாந்து

C)  பாகிஸ்தான்

D)  ஹாங்காங்

ANSWER: D

TNPSC Objective Type Questions in Tamil with Answers

வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க உருவாக்கப்பட்ட எட்டு நாடுகளின் பட்டியலில் ஹாங்காங் இடம்பெறவில்லை.

6) பேரிடர் காலங்களில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வரிசைப்படுத்துக. 1. மட்டுப்படுத்தல் 2. ஆயத்தமாயிருத்தல் 3. பிரதி செயல் 4. மீட்பு

A) 4 3 2 1

B) 3 2 1 4

C)  2 4 3 1

D)  1 2 3 4

ANSWER: D

பேரிடர் காலங்களில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முறையே 1. மட்டுப்படுத்தல் 2. ஆயத்தமாயிருத்தல் 3. பிரதி செயல் 4. மீட்பு

7) சர்வதேச அமைப்பு அல்லது பன்னாட்டு அமைப்பு என்பது பன்னாட்டு உறுப்பினர்களைக் கொண்டு ஒரு நல்ல நோக்கத்திற்காகவும், எந்த ஒரு செயலிலும் தன்னை முன்னிலைப்படுத்தியும் உலக மக்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். பின்வருவனவற்றில் சர்வதேச அமைப்புகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

A) செஞ்சிலுவை

B) ஐக்கிய நாடுகள்

C)  ஐக்கிய இராச்சியம்

D)  செம்பிறை

ANSWER: C

தேசிய அமைப்புகளில் ஒன்று.

8) பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

A) கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெப்பமயமாதலினால் ஏற்பட்டவை ஆகும்.

B)   புயல்களுக்கு பெயர் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு சார்க் அமைப்பு ஆகும்.

C)  பேரிடர் ஏற்படுவதற்கு காரணம் அடுக்குப்படிவம் உருவாகி இயற்கை சமநிலை குறைவது ஆகும்.

D)  வெள்ளச் சமவெளியின் மற்றொரு பெயர் ஆற்றங்கரைப்படிவு என்பது ஆகும்.

ANSWER: B

9) பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க.

 கூற்று 1 : பருவநிலை மாற்றத்தை நாம் சீர்குலைத்ததன் விளைவு தான் தற்போது இயற்கை சமநிலைக்கு காரணமாயிற்று.

கூற்று 2 : உபரிநீர் கால்வாய்களும் வெள்ளச்சமவெளிகளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்றவை.

கூற்று 3 : பரிதியைச் சுற்றியுள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது.

கூற்று 4 : சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல் போன்றவை மாற்று ஆற்றல் வளங்கள் ஆகும்.

A) கூற்று 1, கூற்று 2 சரி மற்றும் கூற்று 3, கூற்று 4 தவறு

B) கூற்று 2, கூற்று 3 சரி மற்றும் கூற்று 4, கூற்று 1 தவறு

C)  கூற்று 3, கூற்று 4 சரி மற்றும் கூற்று 1, கூற்று 2 தவறு

D)  கூற்று 4, கூற்று 1 சரி மற்றும் கூற்று 2, கூற்று 3 தவறு

ANSWER: C

10) நெடுநெல்வாடைக்குரிய திணையைத் தேர்வு செய்க.

A) கரந்தைத் திணை

B) தும்பைத் திணை

C)  வாகைத் திணை

D)  உழிஞைத் திணை

ANSWER: C

TNPSC Objective Type Questions in Tamil with Answers

11) கொடுங்கோல் என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புத்தொகை எனில் புதுப்பெயல் என்பதன் இலக்கணக்குறிப்பு ________ என்பதாகும்.

A) சொல்லிசை அளபெடை

B) எதிர்மறைப் பெயரெச்சம்

C)  பண்புத்தொகை

D)  நேர்மறை வினையெச்சம்

ANSWER: C

புதுப்பெயல் என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புத்தொகை ஆகும்.

12) மழைக்காலத்தில் வீசும் காற்றின் பெயரைத் தேர்வு செய்க.

A) தென்றல் காற்று

B) கீழ்க்காற்று

C)  கோடைக்காற்று

D)  வாடைக்காற்று

ANSWER: D

மழைக்காலத்தில்தான் வாடைக்காற்று வீசும். வாடை-குளிர்காற்று; வடக்கிலிருந்து வீசுவது வாடைக்காற்று

13) இடையர் நிலையை விளக்காத வரியினைத் தேர்வு செய்க.

A) வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்

B) மெய்க்கொள் பெரும் பனி நலியப், பலருடன்

C)  நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

D)  புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

ANSWER: A

14) ‘மெய்க்கொள் பெரும்பனி நலிய’ – இவ்வரிகளில் ‘மெய்’ என்பதன் பொருளைத் தேர்வு செய்க.

A) எழுத்து

B) உண்மை

C)  உடல்

D)  சொல்

ANSWER:  C

15) ‘நெடுநல்வாடை’ – இலக்கணக்குறிப்பு தருக.

A) வினையாலணையும் பெயர்

B) பண்புத்தொகை

C)  வினைத்தொகை

D)  பெயரெச்சம்

ANSWER: B

TNPSC Objective Type Questions in Tamil with Answers

16) ‘பெரும்பனி, கொடுங்கோல்’ – இச்சொற்கள் முறையே பின்பற்றும் புணர்ச்சி விதியினைத் தேர்வு செய்க.

A) ஈறுபோதல் , உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

B) ஈறுபோதல் , இனமிகல்

C)  தன்நின்ற மெய் திரிதல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே,

D)  இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும், இனமிகல்

ANSWER: B

17) கூற்று 1 : காதலிக்கு நீண்டதாகவும், காதலனுக்கு வெற்றியைத் (நன்மையை) தருவதாகவும் உள்ள வாடைக்காற்று – நெடுநல்வாடை.

கூற்று 2 : நெடுநல்வாடை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்வு செய்க

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C)  கூற்று 1,2 இரண்டும் சரி

D)  கூற்று 1,2 இரண்டும் தவறு

ANSWER: A

18) பின்வருவனவற்றுள் தவறானவற்றைத் தேர்வு செய்க

கூற்று 1 : கூதிர்ப்பாசறை – போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தாங்கும் படை வீடு

கூற்று 2 : வாகைத்திணை – வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது.

கூற்று 3 : இப்பாடலில் பயின்று வரும் பா வகை நிரையசை ஆசிரியப்பா. கூற்று 4 : ஏர்பு என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு பெயரெச்சம்.

A) கூற்று 1,2

B) கூற்று 3,4

C)  கூற்று 2,3

D)  கூற்று 1,4

ANSWER:  B

19) அந்தி என்பது _______

A) இரவும் பகலும் சந்திக்கும் நேரம்

B) பகலும் இரவும் சந்திக்கும் நேரம்

C)  இரவின் நடுமைய நேரம்

D)  பகலின் நடுமைய நேரம்

ANSWER: B

20) சரியான இணையைத் தேர்வு செய்க.

A) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

B) நரம்புகள் – மத்தளம் இசைத்தன

C)  மரங்கள் – வேர்விட்டன

D)  ஒளிக்கதிர்கள் – வைரமாயின

ANSWER: A

TNPSC Objective Type Questions in Tamil with Answers

21) கொடுக்கப்பட்ட சொற்களில் ஒன்றன்பால் பயின்று வந்துள்ள சொல்லைத் தேர்வு செய்க.

A) அலைகிறேன்

B) இசைக்கின்றன

C)  உறிஞ்சுகிறது

D)  அசைந்து

ANSWER: C

22) கீழுள்ள கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1 :   வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழ்கின்றன.

கூற்று 2 :   செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.

A) கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி

B) கூற்று 1 மற்றும் கூற்று 2 தவறு

C)  கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு

D)  கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 சரி

ANSWER: B

23) “வன்றொடர்க் குற்றிய லுகரத்தின் முன் வலிமிகும்” என்ற விதி பயின்று வந்துள்ள சொல் இடம்பெற்றுள்ள வரியைத் தேர்வு செய்க.

A) மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப் பயணம்

B) சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள்

C)  செங்குத்தாய் இறங்கிய மழையை

D)  இன்னும் நான் வீட்டுச்சுவரில்

ANSWER: D

24) நாம் வீடு கட்டும்போது சுவர் எழுப்பிய தருணத்தில் அந்த சுவர்களின் மீது தண்ணீர் தெளிப்பது உண்டு. அவ்வாறு நாம் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்க.

கூற்று 1 :    நாம் எழுப்பும் சுவர் நீரை உறிஞ்சும் தன்மையுடையதாக உள்ளதா என சோதித்துப் பார்ப்பதற்கு

கூற்று 2 :    நாம் எழுப்பும் சுவர் மேலும் உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்காக

கூற்று 3 :    நாம் எழுப்பும் சுவரில் ஓட்டை ஏதேனும் உள்ளதா என கண்டுப்பிடிப்பதற்காக

கூற்று 4 :    நாம் எழுப்பும் சுவர் மழைக் காலங்களில் தாங்கி நிற்குமா என ஆராய்வதற்காக

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C)  கூற்று 3 சரி

D)  கூற்று 4 சரி

ANSWER: B

25) “தலையசைத்து” – இச்சொல்லில் பயின்றுவரும் புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க.

விதி 1 : “நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்”.

விதி 2 : “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”.

விதி 3 : “வன்றொடர்க் குற்றிய லுகரத்தின் முன் வலிமிகும்”.

விதி 4 : “இஈஐ வழி யவ்வும்”.

A) விதி 1 மற்றும் விதி 3

B) விதி 2 மற்றும் விதி 4

C)  விதி 1 மற்றும் விதி 2

D)  விதி 3 மற்றும் விதி 4

ANSWER:  B

TNPSC Objective Type Questions in Tamil with Answers

26) மழைக்காலங்களில் சூரியன் உதித்தவுடன் பறவைகள் மகிழ்ச்சியுறக் காரணம் என்னவென்பதைப் பறவைகளின் இடத்தில் உங்களை பாவித்து கண்டறிக.

A) மழைக்காலங்களில் தனக்குத் தேவையான ஓய்வு கிடைத்துவிட்டது என்ற மன நிறைவு

B) இடம்பெயர்வதற்கான சமயம் மற்றும் பயணம் தொடங்கி விட்டது என்று பயணிக்கும் ஆசை

C)  தங்களுக்குத் தேவையான உணவுகளை இனி நாம் தேடிக் கொள்ள இயலும் என்ற நம்பிக்கையின் பிறப்பு

D)  சூரியனின் ஒளிக்கதிர்களால் தங்களின் இறக்கைகள் பறப்பதற்கு ஏதுவாக வளரும் என்ற எண்ணம்

ANSWER: C

27) நாம் துவைத்த துணிகளை சூரியனின் வெளிச்சத்தில் உலர வைக்கிறோம். துணிகளில் இருக்கும் ஈரமும் காணாமல் போய் விடுகிறது. இந்நிகழ்வினை உன் பாடத்தில் உள்ள கவிதைக்கேற்ப கற்பனை செய்து ஒப்புமைப்படுத்தி இந்நிகழ்விற்கேற்ற வரியினைத் தேர்வு செய்க.

A) மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப் பயணம்

B) உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்

C)  தலையசைத்து உதறுகிறது

D)  மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன்

ANSWER: B

28) முதல்கல் என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பைத் தேர்வு செய்க.

A) மனிதத் தீவுகள்

B) தஞ்சைச் சிறுகதைகள்

C)  குருவி மறந்தவீடு

D)  தொலைதூர வெளிச்சம்

ANSWER: B

29) மருதனின் குணம், ______ ஒத்துப்போகிறது.

A) மனித நேய செயலிற்கு

B) பொது நல செயலிற்கு

C)  வீரமிக்க செயலிற்கு

D)  கருணை மிகுந்த செயலிற்கு

ANSWER: B

30) மருதனின் பண்புகளுக்கு முரண் அல்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

A)  கோபப் பார்வை

B)   கடமை உணர்வின்மை

C)  உயர் குணம்

D)  அவா தன்மை

ANSWER: C

TNPSC Objective Type Questions in Tamil with Answers

31) கீழ்காண்பனவற்றுள் தவறாக பொருந்தியதைத் தேர்வு செய்க.

A) காளியப்பன் – ஊர் மிராசு

B) பிரேம்குமார் – முதல் பட்டதாரி

C)  மாரிமுத்து – மீன் பிடிப்பவர்

D)  முல்லையம்மாள் – டீக்கடை உரிமையாளர்

ANSWER:  D

32) “ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால், ஒரே நாளில் வாய்க்காலும் தூய்மையாகிவிடும்.” மேலுள்ள வாக்கியத்தை மருதன் கூறியதன் காரணம் ________

A) உபரி நீர் வடிய

B) வாய்க்கால் சுத்தம் செய்ய

C)  காட்டாமணக்கு செடிகளைக் களைக்க

D)  நீர் நிலைகளைக் காக்க

ANSWER: A

33) நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது யாரோ ஒருவர் மயங்கி விழுந்து விடுகிறார். அங்கு உள்ள அனைவரும் அவரைப் பரிதாபமாக பார்த்தும், பேசிக் கொண்டும் இருக்கின்றனர். அச்சமயத்தில் நீங்கள் செய்யும் முதல் செயல் என்னவாக இருக்கும் என்பதனைத் தேர்வு செய்க.

A) மருத்துவ அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்தல்.

B) ஏதேனும் வண்டி பிடித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல்.

C)  தன்னால் இயன்ற முதலுதவியை செய்தல்.

D)  அவரைச் சார்ந்தவர்களுக்குத் தகவலைத் தெரிவித்தல்.

ANSWER: C

34) மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க நாம் எத்தகைய செயல்களை மேற்கொள்ளலாம் என்பதனைக் குறித்த தொடர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அத்தொடர்களில் குறிப்பிட்டுள்ள செயல்களில் நீங்கள் எத்தகைய செயலை முதலில் மேற்கொள்வீர்கள் என சிந்தித்து தேர்வு செய்க.

A) தன்னால் முடிந்தவரை மரக்கன்றுகளை நடுதல்.

B) தேவையற்ற களைச்செடிகளைப் பிடிங்கி எடுத்தல்.

C)  அபாயம் ஏற்படாமல் தடுக்க மரக்கட்டைகளைக் குறுக்கிடுதல்

D)  வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தல்

ANSWER: A

35) “முதல்கல்” பாடத்தில் மருதன் அவர்களின் செயலுக்கேற்ற திருக்குறளினைத் தேர்வு செய்க.

A) நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை

B) வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு

C)  ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார்

D)  அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கம் ஊதியமும் சூழ்ந்து செயல்

ANSWER: D

TNPSC Objective Type Questions in Tamil with Answers

36) செடிகள் மற்றும் மரங்களினால் நமக்கு பலவித பயன்கள் உண்டு. அப்படி இருக்க, நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளை நாம் ஏன் அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காட்டாமணக்கு செடிகளின் தீமைகளுக்கான கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அக்கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1 : காட்டாமணக்குச் செடியின் வளர்ச்சியினால் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் பிராணவாயு சேர்க்கை தடுக்கப்படுகிறது. இதனால், மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

கூற்று 2 : காட்டாமணக்குச் செடிகளின் தழையில் கழிச்சலை உண்டாக்கும் நச்சுப்பொருளும் ரத்த அணுக்களை அழிக்கும் நச்சுப்பொருளும், நரம்புகளைத் தாக்கும் நச்சுப்பொருளும் உண்டு.

கூற்று 3 : காட்டாமணக்கு செடிகளை எரிமூட்டியாகவும், அங்கக உரங்களாகவும், தழைச்சத்தாகவும் வயல்களில் பயன்படுத்தினால் மண்ணின் தன்மை குறைந்து விடும்.

A) கூற்று 1 மற்றும் கூற்று 2 பொருந்தவில்லை; கூற்று 3 பொருந்துகிறது.

B) கூற்று 1 மற்றும் கூற்று 2 பொருந்துகிறது; கூற்று 3 பொருந்தவில்லை.

C)  கூற்று 2 மற்றும் கூற்று 3 பொருந்துகிறது; கூற்று 1 பொருந்தவில்லை.

D)  கூற்று 2 மற்றும் கூற்று 3 பொருந்தவில்லை; கூற்று 1 பொருந்துகிறது.

ANSWER: B

37) எதனை அடிப்படையாக கொண்டு ஒன்றன்பால், பலவின்பால் என்பன அறியப்படுகின்றன?

A) பால்

B) இட

C)  தன்மை, முன்னிலை

D)  ஒருமை, பன்மை

ANSWER: D

38) ” காளைமாடு வயலில் உழுதது.” இத்தொடர் ______ மாற்றம் அடைந்துள்ளதை உணர்த்துகிறது.

1) அஃறிணை எழுவாய்

2) உயர்திணை எழுவாய்

A) 1 சரி

B) 2 சரி

C)  1,2 சரி

D)  1,2 தவறு

ANSWER: A

39) பேசுபவர் முன்னிலையாளரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது எதைக் குறிக்கிறது?

A) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

B) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

C)  உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை

D)  உளப்பாட்டு முன்னிலைப் பன்மை

ANSWER: A

40) சரியான தொடரைத் தேர்க.

A) ஒவ்வொரு வீடுகளிலும் நூல்கள் உள்ளது.

B) ஒவ்வொரு வீடுகளிலும் நூல்கள் உள்ளன.

C)  ஒவ்வொரு வீட்டிலும் நூல்கள் உள்ளது.

D)  ஒவ்வொரு வீட்டிலும் நூல்கள் உள்ளன.

ANSWER: D

TNPSC Objective Type Questions in Tamil with Answers

41) இருதிணைக்கும் பொதுவாக வரும் சொற்கள்.

A) முல்லை, கதிரவன்

B) மரம், மனிதர்கள்

C)  சீதா, இராமன்

D)  நாம், நாங்கள்

ANSWER: A

42) “நாங்கள் பத்துபேர் சுற்றுலா சென்றோம்” மேற்கண்ட வாக்கியத்தில் “நாங்கள் பத்துபேர் ” எந்த பாகுபாடைக் குறிக்கிறது ?

A) திணைப்பாகுபாடு

B) பால் பாகுபாடு

C)  இடப்பாகுபாடு

D)  எண் பாகுபாடு

ANSWER:  C

43) “தோகையில்லா மயிலைப் பார்த்து தோகையுள்ள மயில் தன் தோகையை விரித்து ஆடியது.” மேற்கண்ட தொடரில் உள்ள பாகுபாடினைத் தேர்க.

A) அஃறிணை எழுவாய்

B) உயர்திணை எழுவாய்

C)  பால் பாகுபாடு

D)  எண் பாகுபாடு

ANSWER: A

44) கீழ்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க.

கூற்று 1: தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு உண்டு.

கூற்று 2: தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஆண்பால், பெண்பால் பாகுபாடு உண்டு.

கூற்று 3: தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு இல்லை.

கூற்று 4: தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.

A) கூற்று 1,2 சரி

B) கூற்று 2,3 சரி

C)  கூற்று 1,4 சரி

D)  கூற்று 3,4 சரி

ANSWER: C

45) கொடுக்கப்பட்டுலவைகளில் தவறான ஒன்றைக் குறிப்பிடுக.

A) பேசுவோன் கேட்போன் பேசப்படும் பொருள் என்ற அடிப்படையில் சொற்களை இனங்காண்பது திணை வகை எனப்படும்.

B) ஒரு வினையின் நிலைகளைத் தெரிந்துக்கொள்ள பயன்படுவதில் முக்கிய ஒன்று காலம்.

C)  ஒன்றா பலவா என சொற்களை வகைப்படுத்துதல் எண் எனப்படும்.

D)  ஒரு வாக்கியம் இயல்பாக அமைய வேண்டுமெனில் திணை,பால்,எண்,இடம்,காலம் ஆகியவை காணப்படுதல் வேண்டும்.

ANSWER: A

TNPSC Objective Type Questions in Tamil with Answers

TNPSC TAMIL QUESTIONS

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

Leave a Comment