TNPSC Objective Type Questions in Tamil: 12th std
1) வம்சமணி தீபிகை என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு ______.
A) 1879
B) 1897
C) 1987
D) 1978
ANSWER: A
எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879 இல் வெளியிட்டார்.
2) பின்வருவனவற்றுள் சு. நெல்லையப்பர் அவர்களின் பணிகளைப் பொறுத்து பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A) சூரியோதயம்
B) உய்யும் வழி
C) தேசபக்தன்
D) கர்மயோகி
ANSWER: B
சு. நெல்லையப்பர் அவர்கள் எழுதிய கவிதை நூலகளில் ஒன்று. இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
3) பின்வருவனவற்றில் வீதிதோறும் காணப்பட வேண்டுபவையாக பாரதியார் உரைப்பது ______.
A) வீரர்கள்
B) இயந்திரங்கள்
C) பள்ளிகள்
D) வேலைகள்
ANSWER: C
“தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது” என பாரதியார் தன கடிதத்தில் எழுதி இருந்தார்.
4) தவறான இணையைத் தேர்வு செய்க.
A) பதிப்பு – முரசுப்பாட்டு
B) துணையாசிரியர் – கர்மயோகி
C) இளசை மணி – மறுபதிப்பு
D) ரா.அ.பத்மநாபன் – வம்சமணி தீபிகை
ANSWER: D
தவறான இணை. ரா.அ.பத்மநாபன் – பாரதி கடிதங்கள்; கவிகேசரி சாமி தீட்சிதர் – வம்சமணி தீபிகை.
5) நாம் பின்வருவனவற்றில் _______ கண்டு குடல் குலுங்கச் சிரிக்க வேண்டும் என்று பாரதி தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.
A) நோய்களைக்
B) பள்ளிகளைக்
C) தொழில்களைக்
D) மூடர்களைக்
ANSWER: D
நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குலுங்கிச் சிரி என பாரதி தான் எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.
tnpsc objective type questions in tamil
6) தேன்மொழி புதியதாக தமிழ்ப்பள்ளி ஒன்றை நிறுவ விரும்புகிறார். தேன்மொழி அவர்கள் பாரதியார் விரும்பும் வகையில் தான் தொடங்கக்கூடிய பள்ளி வளர்தல் வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பாரதியார் விரும்பியபடி தேன்மொழி தொடங்கிய பள்ளி அமைய நீங்கள் கூறும் ஆலோசனை பின்வருவனவற்றுள் என்னவாக இருக்கும்?
A) அனைத்து தெருக்களிலும் பள்ளிகள் திறக்க வேண்டும்.
B) பள்ளியில் புதுப்புது கலைகளையெல்லாம் வளர வேண்டும்.
C) நவீன இயந்திரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
D) நோய்கள் இல்லாத இடத்தில் பள்ளி அமைக்க வேண்டும்.
ANSWER: B
பாரதியார் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர வேண்டும் என்று விரும்பியது அவர் எழுதிய கடிதத்தின் மூலம் நமக்கு தெளிவாகிறது.
7) மோகன் தன் நண்பனுக்கு கடிதம் ஒன்றை எழுத விரும்புகின்றான். கடிதமானது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தெளிவு ஓரளவிற்கு மோகனிற்கு உள்ளது. இருப்பினும் மோகனிடன் கடிதத்தைக் குறித்த ஒரு தவறான எண்ணமும் உள்ளது. அத்தவறான எண்ணத்தைத் தேர்வு செய்க.
A) கவிதை எழுதும்போது மொழியாட்சி ஒரே மாதிரியாக இருக்காது. வேறுபடும்.
B) கடிதம் இலக்கியமாக எழுதும்போது மொழிக்குத் தனி அழகு உருவாகும்.
C) காலத்தின் குரல்களாக ஒவ்வொரு கடிதங்களின் மொழியம் வீறுபெறும்.
D) அனைத்து வகையான கடிதங்களும் ஒரே போக்கினைக் கொண்டிருக்கும்.
ANSWER: D
உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில் அவற்றின் மொழியாட்சி மாறுபடுகிறது.
8) பின்வரும் கூற்றுகளில் முரண் அல்லாத கூற்றுகளைத் தேர்வு செய்க.
கூற்று 1 : நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள நெல்லையப்பர் அவர்கள் மகாகவி பாரதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் பாரதியாரின் புரட்சி நோக்கம் நமக்குத் தெளிவாகிறது.
கூற்று 2 : பாரதியார் அவர்கள் எழுதிய கடைசி கடிதம் குத்திகேசவர் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும்.
கூற்று 3 : தான் கல்வி கற்பதற்காக உதவிவேண்டி பாரதியார் அவர்கள் எட்டயபுரம் அரசருக்கு கவிதைக் கடிதம் ஒன்றை எழுதினார்.
கூற்று 4 : நம் பாடப்பகுதியின் மூலம் பாரதியார் பேச்சுநடையில் கடிதம் எழுதும் திறம் கொண்டவர் என்பது நிரூபணமாகிறது.
A) கூற்று 1 மற்றும் கூற்று 2
B) கூற்று 2 மற்றும் கூற்று 3
C) கூற்று 3 மற்றும் கூற்று 4
D) கூற்று 4 மற்றும் கூற்று 1
ANSWER: B
நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி அவர்கள் நெல்லையப்பர் அவர்களுக்கு எழுதிய கடிதமானது ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த “பாரதி கடிதங்கள்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. பாரதியாரின் கடிதங்கள் அனைத்தும் நம்மிடம் பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பாகும்.
9) பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றைத் தேர்வு செய்க.
கூற்று 1 : ஓருயிரின் இரண்டு தலைகள் ஆணும் பெண்ணும் ஆவார் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார்.
கூற்று 2 : பெண்ணை அடைந்தவர்கள் தன் கண்களை அடைத்துக் கொண்டவர்கள் என்று பாரதி குறிப்பிடுகின்றார்.
கூற்று 3 : வியாபாரங்கள் பெருகவும் இயந்திரங்கள் வளரவும் வேண்டும் என்று பாரதியார் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கூற்று 4 : பாரதியார் தன் கடிதத்தில் கல்வி கல்வி என்று கூவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
A) கூற்று 1 மற்றும் கூற்று 2
B) கூற்று 2 மற்றும் கூற்று 3
C) கூற்று 3 மற்றும் கூற்று 4
D) கூற்று 4 மற்றும் கூற்று 1
ANSWER: C
வியாபாரங்கள் வளரவும் இயந்திரங்கள் பெருகவும் வேண்டும் என்று பாரதியார் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொழில்கள், தொழில்கள் என்று கூவு எனவும் குறிப்பிடுகின்றார், பாரதியார்.
10) கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா! – என்று பாடியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) சிற்பி பாலசுப்பிரமணியம்
D) திரு.வி.க
ANSWER: C
இவ்வரிகள் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இளந்தமிழே! எனும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.
tnpsc objective type questions in tamil
11) பின்வரும் தொடர்களில் பண்புத்தொகை பயின்று வந்துள்ள தொடரைத் தேர்வு செய்க.
A) செம்பரிதி மலைமேட்டில் தலையைக் சாய்ப்பான்
B) விம்முகின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்
C) தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
D) தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்
ANSWER: A
செம்பரிதி – பண்புத்தொகை
12) “பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்! ” இதில் தந்தாய் என்னும் சொல்லில் உள்ள சந்தி யாது?
A) தா
B) த்
C) ந்
D) ஆய்
ANSWER: B
தாந்தாய் = தா (த) + த் (ந்) + த் + ஆய் தா – பகுதி த – ஆனது விகாரம் த் – சந்தி ந் – ஆனது விகாரம் த் – இறந்தகால இடைநிலை ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
13) ” கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போல” கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் வினையெச்சத்தை தேர்வு செய்க.
A) உடைத்து
B) தமிழ்க்குயில்
C) கூண்டு
D) குளிர்
ANSWER: A
வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
14) கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் தவறானவற்றை தேர்வு செய்க.
A) கவிதை வெறிக்கு உணவாய் இருப்பது தமிழ் ஆகும்.
B) செம்பரிதியைப் போல சிவந்தவை தொழிலாளர்களின் கைகள்.
C) பொதிகை மலை தமிழகத்தின் வடக்கில் உள்ளது.
D) பாண்டியனின் தமிழ்ச்சங்கத்தில் இருந்த மொழி தமிழ்.
ANSWER: C
பொதிகை மலை தமிழகத்தின் தென் பகுதியில் உள்ளது.
15) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல் – என்னும் புணர்ச்சி விதிகளின் வரிசையில் புணர்ந்த சொல்லை தேர்வு செய்க.
A) மூண்டுவரும்
B) கொலுவிருந்தாய்
C) தாமுழைக்கும்
D) செந்தமிழ்
ANSWER: D
செம்மை+தமிழ் – ‘ஈறுபோதல்’ என்னும் விதிப்படி, செம்+தமிழ் என்றானது. பின், ‘முன்னின்ற மெய்திரிதல்’ என்னும் விதிப்படி ‘ம்’, ‘ந்’ ஆக மாறியது.
JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE