12th Tamil TNPSC Questions Answers

12th Tamil TNPSC Questions Answers:

16) மீண்டுமந்த’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியை தேர்வு செய்க.

A) ஈறுபோதல்

B) இடையுகரம் இய்யாதல்

C) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

D) முன்நின்ற மெய்திரிதல்

ANSWER: C

மீண்டும்+அந்த = மீண்டுமந்த; உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி புணர்ந்தது.

17) “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!” இதில் கவிஞர் சிற்பி குறிப்பிடும் பழமைநலத்திற்கு பொருந்தாதவற்றை தேர்வு செய்க.

கூற்று 1 : பாண்டியனின் தமிழ்ச்சங்கத்தில் இருந்தது.

கூற்று 2 : பொதிகை மலையில் தோன்றியது.

A) கூற்று 1 பொருந்தவில்லை

B) கூற்று 2 பொருந்தவில்லை

C) கூற்று 1,2 இரண்டும் பொருந்தவில்லை

D) கூற்று 1,2 இரண்டும் பொருந்துகிறது

ANSWER: B

குளிர்பொதிகைத் தென்தமிழே! என தமிழின் பெருமையை, தோன்றிய இடத்தை சிறப்பித்து கூறுகிறார்.

18) கூற்று 1 : மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் தொழிலாளன்.

கூற்று 2 : தொழிலாளர் தோல் மேல் இருக்கும் வியர்வையெல்லாம் வியந்து பாட தமிழின் துணை தேவை. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்வு செய்க

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C) கூற்று 1,2 இரண்டும் சரி

D) கூற்று 1,2 இரண்டும் தவறு

ANSWER: B

உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது – இதனைப்பாட தமிழின் துணை தேவை.

19) தொல் + நூல் – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்லை தேர்ந்தெடுக்கவும்.

A) தொல்நூல்

B) தொண்ணூல்

C) தொன்னூல்

D) தொந்நூல்

ANSWER: C

தொல் + நூல் = தொன்னூல் என வரும்.

20) கீழே உள்ள வார்த்தைகளில் வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

A) பலம் – பழம்

B) ஒளி – ஒலி

C) வலி – வழி

D) கோவை – கொவை

ANSWER: D

கோவை கொவை இது எழுத்துப்பிழை ஆகும். மற்றவை அனைத்தும் சொற்பொருட்பிழை ஆகும்.

12th Tamil TNPSC Questions Answers:

21) வேற்றுமைப் புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் எவ்வாறு திரியும்

A) ளகரம் லகரமாகும்

B) ளகரம் னகரமாகும்

C) ளகரம் டகரமாகும்

D) ளகரம் ணகரமாகும்

ANSWER: C

வேற்றுமைப் புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாகும்.

22) கற்கோயில் – இச்சொல்லுடன் தொடர்புடைய வேற்றுமைப்புணர்ச்சி விதியினைத் தேர்வு செய்க‌.

A) லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு.

B) ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு.

C) ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு.

D) லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு

ANSWER: A

கல் + கோயில் = கற்கோயில் கால் + பெரிது = காற்பெரிது

23) ” அறியும் சிவனும் ஒண்ணு அரியாதவன் வாயில் மண்ணு ” மேற்காணும் வாக்கியத்தில் உள்ள பிழையை வகைப்படுத்துக்க.

A) எழுத்துப்பிழை.

B) சொற்பொருட்பிழை.

C) சொற்றொடர்ப் பிழை.

D) பொதுவான பிழைகள் சில

ANSWER: B

” அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு ” ஆகும். அறி – தெரிந்து கொள்

24) நான்கு மெழுகுவர்த்திகள் எறிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!’ காற்றை கண்டதும்… ‘அமைதி’ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.காற்று பட்டதும் அணைந்துவிட்டது. ‘அண்பு’ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது. ‘அரிவு’ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது. நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். ‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே’ என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எறிந்துகொண்டு இருந்த நான்காவதுமெழுகுவர்த்தி சொன்னது, ‘வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது. சிறுவன் உடனே.. நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து “உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. ‘நம்பிக்கை’ என்றது அந்த மெழுகுவர்த்தி. நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது…!! மேற்கண்ட பத்தியில் உள்ள எழுத்துப்பிழை தவிர்க்க பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட விதிகளை பயன்படுத்தி, பிழையுள்ள சொற்களை திருத்தி எழுதவும்

A) அணைந்து – அனைந்து போராடி – போறாடி இழந்து – இளந்து

B) அரிவு- அறிவு; அண்பு – அன்பு ; எரிந்து – எறிந்து ;

C) காற்று – காத்து; சிறுவன் – சிருவன் ; மற்ற – மத்த

D) நான்காவது – நாண்காவது; வர்த்தி – வத்தி; மெலிதாய் – மெளிதாய்;

ANSWER: B

25) சொற்களின் பொருள் வேறுபாட்டினைப் பயன்படுத்தி கீழ்காணும் தொடரைத் திருத்தி எழுதுக. “கிலியைக் கண்டதும் புளி என நினைத்து கிளி கொண்டான்”

A) கிளியைக் கண்டதும் புலி என நினைத்து கிலி கொண்டான்

B) கிலியைக் கண்டதும் புளி என நினைத்து கிலி கொண்டான்

C) கிளியைக் கண்டதும் புலி என நினைத்து கிளி கொண்டான்

D) கிலியைக் கண்டதும் புளி என நினைத்து கிளி கொண்டான்

ANSWER: A

12th Tamil TNPSC Questions Answers:

26) எழுத்துப்பிழைகளை தவிர்க்க உதவும் விதிகளுள் தவறான விதியைத் தேர்வு செய்க. கூற்று 1 : வல்லின மெய்கள் ஈறொற்றாய் வாரா கூற்று 2 : மெல்லின எழுத்துகளில் ண,ங சொல்லின் தொடக்கமாக வாரா. கூற்று 3 : ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை. கூற்று 4 : ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை

A) கூற்று 1

B) கூற்று 2

C) கூற்று 3

D) கூற்று 4

ANSWER: B

மெல்லின எழுத்துகளில் ண,ன சொல்லின் தொடக்கமாக வாரா.

27) மத்து – இச்சொல்லுக்கேற்ற விதிகளைத் தேர்வு செய்க. விதி 1 : வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக தகரமும் றகரமாக மாறும். விதி 2 : தனிக்குறிலடுத்த லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். விதி 3 : தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்குமுன் அவ்வல்லின மெய்யோ அவற்றின் இன மெல்லினமெய்யோ வரும். விதி 4 : க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற எழுத்துகள் வாரா.

A) விதி 1 மற்றும் விதி 2

B) விதி 2 மற்றும் விதி 3

C) விதி 3 மற்றும் விதி 4

D) விதி 4 மற்றும் விதி 1

ANSWER: C

மத்து என்னும் சொல்லுக்கேற்ற விதிகள்: 1. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்குமுன் அவ்வல்லின மெய்யோ அவற்றின் இன மெல்லினமெய்யோ வரும். 2. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற எழுத்துகள் வாரா.

28) தண்டியலங்காரத்தில் உள்ள பெரும் பிரிவுகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

ANSWER: B

பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது தண்டியலங்காரம்.

29) “ஓங்கலிடை வந்து..” தமிழ்மொழி எந்த மலையுடன் இணைக்கப்படுகிறது?

A) அமேசான் மலை

B) பொதிகைமலை‌

C) இமயமலை

D) ஆரவல்லி மலை

ANSWER: B

தமிழ்மொழி பொதிகை மலையில் தோன்றியதாக பல சான்றுகள் உள்ளன.

30) பின்வருவனவற்றுள் அக இருளைப் போக்குவதற்கு ஒளிர்வது _______.

A) ஓங்கல்

B) ஏங்கொலிநீர்

C) வெங்கதிர்

D) ஞாலம்

ANSWER: C

இருளைப் போக்கும் இரண்டுகளில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்

12th Tamil TNPSC Questions Answers:

31) பொருந்தாதவற்றைத் தேர்வு செய்க.

A) முத்துவீரியம்

B) தொல்காப்பியம்

C) வீரசோழியம்

D) குவலயானந்தம்

ANSWER: D

மற்றவை அனைத்தும் அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் ஆகும். குவலயானந்தம் – அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ஆகும்.

32) தவறான இலக்கணக்குறிப்பைத் தேர்வு செய்க.

A) வந்து – வினையெச்சம்

B) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

C) ஆங்கவற்றுள் – சுட்டுப்பெயர்

D) வெங்கதிர் – பெயர்ச்சொல்

ANSWER: D

வெண்கதிர் என்பது பண்புத்தொகை ஆகும்.

33) “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்” – இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் அடிஎதுகை சொற்களை தேர்வு செய்க

A) ஓங்கலிடை – வந்து

B) விளங்கி – இருளகற்றும்

C) ஓங்கலிடை – ஏங்கொலிநீர்

D) ஏங்கொலிநீர் – ஞாலத்(து)

ANSWER: C

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும். ‘ங்’ என்னும் எழுத்து இரண்டு அடியிலும் உள்ள சொற்களில் ஒன்றி வந்துள்ளதால் இஃது அடியெதுகைத் தொடை நயம் மிக்க சொற்கள் ஆகும்

34) இருளகற்றும்’ என்னும் சொல்லின் புணர்ச்சி விதியைத் தேர்வு செய்க.

A) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

B) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

C) இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வளி வவ்வும்

D) றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற

ANSWER: B

இருள்+அகற்றும் = இருளகற்றும்; உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி இச்சொல் புணர்ந்துள்ளது.

35) கூற்று 1: “ஓங்கலிடை வந்து..” என்னும் பாடல் யாப்பணியியலில் இடம்பெற்றுள்ளது. கூற்று 2: இந்நூலின் ஆசிரியர் கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டி ஆவார்.

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C) கூற்று 1,2 இரண்டும் சரி

D) கூற்று 1,2 இரண்டும் தவறு

ANSWER: B

“ஓங்கலிடை வந்து..” என்னும் பாடல் பொருளணியியலில்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

12th Tamil TNPSC Questions Answers:

36) “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” இக்குறளுக்கு முரணாண தொடரை/தொடர்களைத் தேர்வு செய்க. கூற்று 1 : இக்குறள் வேற்றுமை அணிக்கு சான்றாகும்‌. கூற்று 2 : நெருப்பு, கடுஞ்சொல் இரண்டும் காயத்தை ஏற்படுத்தும்‌. முந்தையது ஆறிவிடும், பிந்தையது ஆறாது.

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C) கூற்று 1,2 இரண்டும் சரி

D) கூற்று 1,2 இரண்டும் தவறு

ANSWER: D

இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.

37) திறனாய்வுக் கலையைத் தமிழக்கு அறிமுகப்படுத்தியவர்களில் __________________ குறிப்பிடத்தக்கவர்.

A) தி.சு. நடராசன்

B) ஔவை நடராசன்

C) தமிழண்ணல்

D) வல்லிக்கண்ணன்

ANSWER: A

திறனாய்வுக் கலையைத் தமிழக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர். திறனாய்வாளராக அறியப்படுகிறார்.

38) அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப – இவ்வரிகளில் இருந்து உணரப்படும் கருத்து யாது?

A) நிலத்தின் அழகு, அறம் நிறைந்தது

B) பாவகைகளோடு அறவியல் கருத்துகள்

C) நிலங்கள் அனைவருக்கும் உரியன

D) பொருள்கள் மூன்று வகைப்படும்

ANSWER: B

இவ்வரிகளில் தொல்காப்பியம் பா வகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லுகிறது

39) தொன்மையான மொழி எனப்படுவது எதிலிருந்து தொடங்குகிறது?

A) எண்ணிலும் எழுத்திலும்

B) சமிக்ஞையிலும் இசையிலும்

C) எழுத்திலும் பொருளிலும்

D) நடனத்திலும் இசையிலும்

ANSWER: B

தொன்மையான மொழி எனப்படுவது சமிக்ஞையிலும் இசையிலும் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.

40) முல்லைக்கலி என்னும் நூலில் எவ்வித சொல்வளம் நிரம்பி இருக்கிறது?

A) ஆடுகளின் பல இனப்பெயர்கள்

B) காளைகளின் பல இனப்பெயர்கள்

C) நிலங்களின் பல அடையாளப்பெயர்கள்

D) மலைகளின் பல அடையாளப்பெயர்கள்

ANSWER: B

முல்லைக்கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

12th Tamil TNPSC Questions Answers:

41) பின்வரும் செய்யுள் வரிகளில் புறநானூற்று வரிகள் அல்லாதனவற்றைத் தேர்வு செய்க.

A) கடாஅ யானைக் கலிமான் பேக

B) புணரின் புணராது பொருளே

C) இவன் தந்தை தந்தை

D) யாமும் பாரியும் உளமே

ANSWER: B

“புணரின் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே” என்பது நற்றிணையிலிருந்து எடுக்கப்பட்ட பாடல் ஆகும்.

42) “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” – கொடுக்கப்பட்டுள்ள புறநானூற்றுப்பாடலில் உள்ள நடை அழகியலைச் சிறப்பிக்கும் சொல் அல்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

A) பேக

B) ஈத்த

C) நல்லிசை

D) கெடாஅ

ANSWER: A

புறநானூற்றுப்பாடலில் உள்ள நடை அழகியலைச் சிறப்பிக்கும் சொல் என்பது அல்ல

43) கூற்று : “தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்கஇலக்கியமே முதன்மை ஆதாரம்.” கீழ்காணும் வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள இவ்வரிகளுக்கு மிகவும் பொருத்தமானவற்றைத் தேர்வு செய்க.

A) இக்கூற்று எப்பொழுதும் சரியானது ஆகும்.

B) இக்கூற்று சில நேரங்களில் சரியானதாகும்.

C) இக்கூற்று எப்பொழுதும் தவறானது ஆகும்.

D) இக்கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய இயலாது.

ANSWER: A

அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருகிற சங்க இலக்கியம், குறிப்பிட்ட சில அழகியல் பரிமாணங்களை வரித்துக் கொண்டுள்ளது.

44) “இடுக வொன்றோ, சுடுகவொன்றோ ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே” இப்புறநானூற்று வரிகளுக்கு முரணான தொடரைத் தேர்வு செய்க.

A) தொடரமைப்பது என்பது எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்றுவரும்.

B) இப்பாடல் வரிகளில் தொடரமைக்கும் விதி மாறி வந்துள்ளது.

C) இவ்வரிகள் மறுதலைத் தொடரியல் போக்குக்குத் தகுந்த சான்றாகும்.

D) இப்பாடல் சங்க இலக்கியம் பாடல் வரிகள் ஆகும்.

ANSWER: A

இவ்வரிகள் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிகளுக்கு பொருந்தாமல், பொதுவாக தொடரமைக்கும் முறையை விளக்குகிறது.

45) கூற்று 1: மொழியின் வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை அறம்,பொருள், இன்பம், வீடு ஆகியவை ஆகும்.

கூற்று 2: அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் ‘லட்சியப் பொருள்களோடு’ இரண்டற இணைத்துவிடுகிறது.

A) கூற்று 1 சரி; கூற்று 2 தவறு

B) கூற்று 2 சரி; கூற்று 1 தவறு

C) கூற்று 1,2 இரண்டும் சரி

D) கூற்று 1,2 இரண்டும் தவறு

ANSWER: B

மொழியின் வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி.

12th Tamil TNPSC Questions Answers:

TNPSC TAMIL QUESTIONS

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

Leave a Comment